முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷேக் ஹசீனா ஆட்சியின் போது பலர் காணாமல் போன விவகாரத்தில் இந்தியா மீது வங்கதேசம் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2024      உலகம்
Muhammad-Yunus-2024-11-21

Source: provided

வங்காளதேசம் : ஷேக் ஹசீனா ஆட்சியில் பலர் காணாமல் போன விவகாரத்தில் இந்தியா மீது வங்கதேசம் குற்றச்சாட்டியுள்ளது.

வங்கதேசத்தில் ஷேக் ஹனீசா ஆட்சிக்காலத்தில் அரசுக்கு எதிரான கருத்துக்களை கொண்ட பலர் காணாமல் போயினர். அவர்களுக்கு அடுத்து என்ன ஆனது என்ற தகவல்கள் இன்று வரை தெரியவரவில்லை. கடந்த ஆகஸ்டில் மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி முடிவுக்கு வந்த பின் சிறையில் இருந்து விடுதலையான அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது.

ஷேக் ஹசீனா ஆட்சியில் வலிந்து காணாமல் ஆகாதவர்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான 5 பேர் கொண்ட ஆணையத்தை யூனுஸ் தலைமையிலான அரசு அமைத்தது. இந்நிலையில் ஷேக் ஹசீனாவின் ஆட்சியின் போது எதிர் கருத்து உடையவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களில் இந்தியாவின் தொடர்பு இருப்பதை அந்த குழு கண்டறிந்துள்ளதாக அரசு நடத்தும் செய்தி நிறுவனமான பிஎஸ்எஸ் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

ஆணையத்தின் அறிக்கைப்படி, காணாமல் போனவர்களில் சிலர் இன்னும் இந்திய சிறைகளில் இருக்கலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நடந்த கைதிகள் பரிப்புமாற்றம் குறித்த புலனாய்வுத் தகவல்களை கண்டறிந்துள்ளதாக ஆணையம் தெரிவித்தது. இந்தியாவில் இன்னும் சிறையில் இருக்கும் வங்கதேச குடிமக்களை அடையாளம் காண வங்கதேச வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகங்களை ஆணையம் வலியுறுத்தி உள்ளது. மேலும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,500க்கு மேல் இருக்கும் என்று ஆணையம் மதிப்பிட்டுள்ளது..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து