முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிறிஸ்துமஸ் சந்தை விபத்து: ஜெர்மனி அதிபர் பதவி விலக எலான் மஸ்க் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2024      உலகம்
Ealn Musk-2024-11-07

Source: provided

டெக்ஸ்சாஸ் : ஜெர்மனி அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எலான் மஸ்க் வலியுறுத்தியுள்ளார்.

உலகம் முழுவதும் கிறிஸ்தவ மத பண்டிகையான கிறிஸ்துமஸ் வரும் 25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கிறிஸ்தவ மதத்தினர் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி ஜெர்மனி நாட்டின் சண்டோனி அன்ஹட் மாகாணம் மக்டக்பெர்க் நகரின் மையப்பகுதியில் சந்தை அமைக்கப்பட்டிருந்தது. இந்த சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை(20.12.2024) இரவு குவிந்த மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவையான கேக், பரிசுபொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கிக்கொண்டிருதனர்.

அப்போது அங்கு வேகமாக வந்த கார் சந்தைக்குள் புகுந்தது. இதில் சந்தையில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியது. இந்த கோர சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமத்தித்தனர். மேலும், கார் விபத்தை ஏற்படுத்திய சவுதி அரேபியாவை சேர்ந்த 50 வயதான டாக்டரை கைது செய்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இது பயங்கரவாத தாக்குதல் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது எக்ஸ் தள பதிவில் "ஜெர்மன் அதிபர் ஓலாப் ஷோல்ஸ் உடனடியாக பதவி விலக வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது பதிவில் "ஷோல்ஸ் திறமையற்ற முட்டாள்; அவர் பதவி விலக வேண்டும் "என்று குறிப்பிட்டுள்ளார். எலான் மஸ்க்கின் இந்த பதிவு தற்போது இணையத்தில் பெரும் பேசு பொருளாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து