முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாப்கான்களுக்கு ஜி.எஸ்.டி.: நிர்மலா சீதாராமன் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2024      இந்தியா
Nermala 2024-12-21

Source: provided

புதுடெல்லி : பாப்கான்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஏன்? என்பது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில், மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் தலைமையில், சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) கவுன்சிலின் 55வது கூட்டம் நேற்று முன்தினம் (டிசம்பர் 21) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சுவையூட்டப்பட்ட பாப்கார்ன், பழைய கார் விற்பனை வரி உயர்வு உள்ளிட்ட பல முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

உப்பு மற்றும் மசாலாப் பொருட்களுடன் கூடிய பாப்கார்னுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும் என்றும், பேக் செய்யப்பட்ட பாப்கார்னுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என்றும் கேரமல் பாப்கார்னுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் அந்த ஜி.எஸ்.டி. கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பை அமல்படுத்தும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு தற்போது அமலில் இருக்கிறது. நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு என்றாலும், ஒவ்வொரு பொருளிலும், இவ்வாறு வேறு வேறாக வகை பிரித்து ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவது குழப்பங்களை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் பாப்கான்களுக்கு வெவ்வேறு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது குறித்து மத்திய நிதிஅமைச்சர்  நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "கேரமல் பாப்கார்னில் சர்க்கரை சேர்க்கப்படுவதால், இனிப்பு பண்டங்களுக்கு விதிக்கப்படும் வகையில் அவற்றுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்க முடிவு செய்யப்பட்டது. சாதாரண பாப்கார்ன், உப்பு வகை உணவுகளில் (Namkeen) வருவதால் 5 சதவீத வரியும், அதுவே பேக்கேஜ் செய்யப்பட்டதாக இருந்தால் 12 சதவீத ஜி.எஸ்.டி. வரியும் விதிக்கப்பட்டுள்ளது" என்று அவர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து