முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2024-ம் ஆண்டில் 3-வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை நீர்மட்டம்

செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2024      தமிழகம்
Mettur-Dam 2024-09-04

Source: provided

சேலம் : மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக நிரம்ப உள்ளதாக திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தயாளகுமார் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் அணை நீர்மட்டம் நேற்று காலை 119.97 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று காலை வினாடிக்கு 2 ஆயிரத்து 516 கன அடியிலிருந்து 2 ஆயிரத்து 875 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

அணையின் நீர்மட்டம் 119.87அடியிலிருந்து 119.97அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 93.42 டி.எம்.சி.யாக உள்ளது. அணையின் மொத்த நீர் இருப்பு 93.47 டி.எம்.சி. ஆகும். நடப்பு ஆண்டில் மேட்டூர் அணை கடந்த ஜூலை 30-ம் தேதி முதன் முறையாக நிரம்பியது. மீண்டும் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி இரண்டாவது முறையாக நிரம்பியது.

இந்த நிலையில் மேட்டூர் அணை மீண்டும் நிரம்ப உள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணை நிரம்பும் தருவாயில் இருப்பதால் நேற்று காலை நீர்வளத் துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் சேலம் கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார் உதவி செயற் பொறியாளர்கள் செல்வராஜ் மதுசூதனன் ஆகியோருடன் மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டனர்.

அணையின் வலது கரை, இடது கரை ஆய்வு சுரங்க பகுதி ஆகியவற்றை பார்வைத்தார். மேட்டூர் அணை இடது கரை அமைந்துள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் அதிகாரிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் பேசியதாவது:- நீர்வரத்து குறைவாக இருப்பதால் அணை நிரம்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. உபரிநீர் திட்டத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். டெல்டா பாசனத்திற்கு தேவையை பொறுத்து தடையின்றி தண்ணீர் வழங்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து