முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசின் நிகழ்ச்சியில் உதவியாளரை அமைச்சர் திட்டியதால் சலசலப்பு

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2025      தமிழகம்
mrk 2025-01-03

Source: provided

சென்னை: மத்திய அரசின் நிகழ்ச்சியில் உதவியாளரை அமைச்சர் ஒருமையில் திட்டியதால் சலசலப்பு ஏற்பட்டது.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது முதல், அமைச்சர்களின் நடவடிக்கைகளால் விமர்சனங்களை பெற்று வருகிறது. மகளிர் விடியல் பயணம் தொடர்பாக பேசும்போது அமைச்சர் பொன்முடி 'ஓசி பயணம்' என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த திரைப்பட நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம் , கௌதமி ஆகியோர் குறித்து திமுகவைச் சேர்ந்த சைதை சாதிக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும் பின்பு அதற்காக மன்னிப்பு கேட்டதும் நடைபெற்றது.

சமீபத்தில், ஒரு சமூகத்தை குறிப்பிட்டு ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், தஞ்சாவூரில் மத்திய அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உதவியாளரை ஒருமையில் பேசியுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பொதுமேடையில் அமைச்சர் தனது உதவியாளரை திட்டியதால் சலசலப்பு ஏற்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து