முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவுன்சர்போல் நடந்து கொண்டார்: ராகுல்காந்தி குறித்து பா.ஜ.க. எம்.பி.

செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2024      இந்தியா
Rahul 2024 07 23

Source: provided

புதுடெல்லி : ராகுல்காந்தி பவுன்சர்போல் நடந்து கொண்டார் என்று பாராளுமன்றத்தில் நடந்த தள்ளுமுள்ளுவில் காயமடைந்த பா.ஜ.க. எம்.பி. தெரிவித்துள்ளார்.

அம்பேத்கரை மத்திய அமைச்சர் அமித்ஷா அவமதித்ததாக கூறி கடந்த வாரம் பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. பதிலுக்கு பா.ஜ.க. எம்.பி.க்களும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் ஒடிசா மாநிலம் பாலசோரைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்து காயம் அடைந்தார்.

ராகுல்காந்தி தன்னை கீழே தள்ளியதாக அவர் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. காயம் அடைந்த பிரதாப் சந்திர சாரங்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.  இந்தநிலையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- முன்பை விட தற்போது நலமாக உள்ளேன். என் தலையில் உள்ள தையல்கள் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. பாராளுமன்றத்தில் நடந்த சம்பவத்தின்போது திடீரென ராகுல் காந்தி தனது கட்சியினருடன் வந்து முன்நோக்கி தள்ளினார். லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரைப் போல் அல்லாமல் பவுன்சர் போல் நடந்து கொண்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து