முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூரில் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை

சனிக்கிழமை, 4 ஜனவரி 2025      தமிழகம்
raid 2025-01-04

Source: provided

வேலூர்: வேலூரில் எம்.பி. கதிர் ஆனந்தின் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் சோதனை நடைபெற்றது. 

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு உள்ளது. இவரது மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதி எம்பியாக உள்ளார். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். அமைச்சர் துரைமுருகன் தற்போது சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் உள்ளார். கதிர் ஆனந்த் குடும்பத்துடன் விடுமுறைக்காக துபாய் சென்றுள்ளார். அவர் வரும் 7-ம் தேதி இந்தியா வருகிறார்.

இந்நிலையில், துரைமுருகன் வீடு மற்றும் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் கதிர் ஆனந்த்தின் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டு வரும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி மற்றும் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீடு உள்ளிட்ட நான்கு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சிஆர்பிஎப் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) காலை சோதனையை தொடங்கினர்.

இதில், அமைச்சர் துரைமுருகன் வீட்டில் யாருமே இல்லாத நிலையில் 7 மணி நேரம் அமலாக்கத் துறை அதிகாரிகள் காத்திருந்தனர். பின்னர், துபாயில் இருந்தபடி தனது பிரதிநிதிகள் முன்னிலையில் சோதனை தொடர, மின்னஞ்சல் மூலம் சென்னை அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு கூறியிருந்தார். அதன்படி, கதிர் ஆனந்தின் பிரிதிநிதிகளான வன்னியராஜா, சுனில்குமார், வழக்கறிஞர் பாலாஜி முன்னிலையில் நேற்று முன்தினம் பகல் 2 மணியளவில் சோதனையை அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடங்கினர்.

இந்தச் சோதனை நள்ளிரவு 1.30 மணிக்கு முடிவுற்றது. பூஞ்சோலை சீனிவாசன் தொடர்புடைய இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சில ஆவணங்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதேநேரம், கிங்ஸ்டன் கல்லூரியில் மட்டும் நேற்று முன்தினம் காலை தொடங்கிய சோதனை 24 மணி நேரத்தை கடந்து நேற்றும் (டிச.4) நீட்டித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து