முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோசமான வானிலை எதிரொலி: கொல்கத்தாவில் 60 விமானங்கள் தாமதம்

திங்கட்கிழமை, 6 ஜனவரி 2025      இந்தியா
Air

Source: provided

கொல்கத்தா: கொல்கத்தா விமானநிலையத்தில் மோசமான வானிலையால் 60 விமானங்கள் தாமதமாகியுள்ளது.

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் நேற்று கடும் மூடுபனியினால் மோசமான வானிலை நிலவியது. இதனால் அங்குள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் காலை 7.10 மணி முதல் 9 மணி வரை விமானங்கள் இயக்கப்படவில்லை என அந்த விமான நிலையத்தின் இயக்குனர் பரவத் ரஞ்சன் பியூரியா தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சுமார் இரண்டு மணிநேரம் 30 விமானங்களின் வருகை தாமதமானதுடன், 30 விமானங்களின் புறப்பாடும் தாமதமாகியுள்ளது. மேலும், அங்கு தரையிறக்கப்பட விருந்த 5 விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்கு திசைத் திருப்பி விடப்பட்டது.

இந்நிலையில், விமான நிலைய முனையத்தில் தவிக்கும் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். பின்னர், காலை 9 மணிக்கு மேல் வானிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டதினால் விமானச் சேவை மீண்டும் துவங்கப்பட்டு 9.04 மணியளவில் துபாயிலிருந்து வந்த முதல் விமானம் அங்கு தரையிறங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து