முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவில் அதிக விக்கெட்: ஜஸ்ப்ரிட் பும்ரா புதிய சாதனை

சனிக்கிழமை, 4 ஜனவரி 2025      விளையாட்டு
Bumra 2024-03-20

Source: provided

சிட்னி : இந்திய அணி வீரர் ஜஸ்பிரீத் பும்ரா, பிஷன் பேடியின்  46 ஆண்டுகால சாதனையை ஆஸ்திரேலியாவில் முறியடித்துள்ளார்.

32 விக்கெட்டுகள்...

சிட்னி டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் பும்ரா 2 விக்கெட்டுகள் எடுத்து பந்துவீசுவதில் சிரமம் என ஸ்கேன் எடுக்க மருத்துவமனை சென்றார். இந்த 2 விக்கெட்டுகளுடன் இந்தத் தொடரில் மொத்தமாக 32 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியா தொடரில் ஒரு இந்தியரின் அதிகபட்ச விக்கெட்டுகள் 31ஆக இருந்தது. அதை பிஷன் பேடி 1977-78 தொடரில் எடுத்திருந்தார். தற்போது, 46 ஆண்டுகளுக்குப் பிறகு பும்ரா அதை முறியடித்துள்ளார். ஸ்கேன் எடுக்க சென்ற பும்ரா மீண்டும் ஓய்வறைக்கு திரும்பினார். 

10-வது இடத்துக்கு...

இந்திய அணி 2ஆம் நாள் முடிவில் 145 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒரு வெளிநாட்டு வீரர் எடுத்த அதிகபட்ச விக்கெட்டுகள் பட்டியலில் இங்கிலாந்தைச் சேர்ந்த மௌரிஸ் டாடே 38 விக்கெட்டுகள் (1924) உடன் முதலிடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் பும்ரா 10-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இன்னும் 7 விக்கெட்டுகள் எடுத்தால் ஆஸி.யில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் என்ற உலக சாதனை நிகழ வாய்ப்பிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து