முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஸ்கரில் அதிர்ச்சி சம்பவம்: ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் சடலமாக மீட்பு

சனிக்கிழமை, 4 ஜனவரி 2025      இந்தியா
Suicide 2023 04 29

Source: provided

ராய்ப்பூர் : சத்தீஸ்கரில் ரூ.120 கோடி சாலை திட்டத்தில் முறைகேடு நடந்ததை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் ஒருவர் செப்டிக் டேங்கில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் ரூ.120 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணியில் முறைகேடு நடந்துள்ளது. இதனை, உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் பத்திரிகையாளராக பணியாற்றி வந்த முகேஷ் (வயது 28) என்பவர் அம்பலப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சாலை போடும் ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரசேகரிடம் அரசு விசாரணை நடத்தியது.

இந்த சூழலில், கடந்த 1-ம் தேதி முகேஷ் காணாமல் போய்  விட்டதாக, அவரது அண்ணன் யுகேஷ் சந்திரசேகர் போலீஸில் புகார் அளித்தார். மேலும் ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரசேகரின் சகோதரர் ரிதேஷை சந்திக்க சென்ற பிறகு தான் அவர் மாயமானது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், கடந்த 3-ம் தேதி சுரேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான இடத்தில் உள்ள செப்டிக் டேங்கில், முகேஷ் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் சக பத்திரிகையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து