முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லல்லு கட்சியுடன் கூட்டணி இல்லை: பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தகவல்

திங்கட்கிழமை, 6 ஜனவரி 2025      இந்தியா
nitish-kumar

Source: provided

பீகார்: ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் அதனை பீகார் முதல்வர் நிதீஷ் குமார் நிராகரித்துள்ளார்.

பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சியில் உள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளன. சட்டப் பேரவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் இப்போதிருந்தே தயாராகி வருகின்றன.

முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் தேர்தலைச் சந்திப்போம் என பாஜக ஏற்கெனவே அறிவித்துவிட்டது. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் அணியும் தங்கள் பக்கம் நிதீஷ் குமாரை இழுக்க முயற்சித்து வருகிறது.

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள முடிவு செய்தால், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் மீண்டும் கைகோக்கத் தயார் என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கடந்த சில நாள்களில் இருமுறை அழைப்பு விடுத்துவிட்டது. லல்லு பிரசாதும் நேரடியாக நிதீஷ் குமாருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், இதற்கு முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி எவ்வித பதிலும் அளிக்காமல் இருந்து வந்தது.

இந்நிலையில் மாநிலம் தழுவிய பிரகதி யாத்திரையின் ஒரு பகுதியாக வடக்கு பீகாரின் முசாஃபர்பூருக்கு நிதீஷ் குமார்  வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த நிதீஷிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, எங்கள் கட்சிக்கு முன்பு பீகாரில் ஆட்சியில் இருந்தவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள்? சூரியன் மறைந்த பிறகு மக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கே அஞ்சும் சூழல் நிலவியது.

மருத்துவமனைகள் மோசமான இருந்தன. பள்ளிகள், கல்வித் தரத்தில் பீகார் மிகவும் பின்தங்கியிருந்தது. பல இடங்களுக்கு சாலை வசதியே இல்லாமல் இருந்தது. மாநிலத்தில் மத, ஜாதிய வன்முறை தொடர்கதையாக இருந்தது. பெண்களின் நிலை, முக்கியமாக கிராப்புற பெண்களின் எவ்வளவு மோசமாக இருந்தது? ஆனால்,  மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தியுள்ளோம். அவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறார்கள். பீகாரின் மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய அரசும் செயல்படுத்தி வருகிறது. நான் தவறுதலாக அவர்களுடன் சிலமுறை கூட்டணி அமைத்துவிட்டேன் என்று பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து