முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிக்கு 180 கி.மீட்டர் வேகத்தில் சீறிப் பாய்ந்த வந்தே பாரத் ரெயில் : மத்திய அமைச்சர் பகிர்ந்த வீடியோ வைரல்

சனிக்கிழமை, 4 ஜனவரி 2025      இந்தியா
Vande-Bharat

Source: provided

புதுடில்லி : மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் சென்ற வந்தே பாரத் ரெயிலின் சோதனை ஓட்டத்தின் போது, ஒரு டம்ளர் தண்ணீர் ஆடாமல் அசையாமல் இருந்த வீடியோவை, சமூகவலைதளத்தில் மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார்.

நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் 5-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதி நவீன சொகுசு வசதி கொண்ட இந்த ரெயில்கள் ஏசி வசதி, பயோ டாய்லட், தானியங்கி கதவு என பாதுகாப்பு அம்சங்கள் கொண்டவை. பயணிகள் மத்தியில் வரவேற்பு கொண்ட இந்த ரெயில்கள் இருக்கை வசதி மட்டுமே உள்ளது.

படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த வந்தே பாரத் ரெயில் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. இந்த ரெயிலின்சோதனை ஓட்டம் வெற்றிக்கரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் , படுக்கை வசதி கொண்ட ரெயிலின்சோதனை ஓட்டம் குறித்து வீடியோ ஒன்றை, சமூக வலைதளத்தில், அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார்.

ரெயில் மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் செல்கிறது. ரெயிலுக்குள் கண்ணாடி டம்ளரில் வைக்கப்பட்டு இருந்த தண்ணீர், ஆடாமல் அசையாமல் இருப்பதை வீடியோவில் காண முடிகிறது. இது குறித்து அஸ்வினி வைஷ்ணவ் கூறி இருப்பதாவது: படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் கடந்த 3 நாட்களாக, நன்றாக நடந்து வருகிறது. 180 கி.மீ., வேகம் வரை சோதனை வெற்றிக்கரமாக நடந்தது. விரைவில் ரெயில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து, மக்கள் பயன் அடைய வேண்டும். இதனால் சோதனை ஓட்டம் இந்த மாதம் முழுவதும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து