முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.சி.சி.ஐ.க்கு ரவி சாஸ்திரி கேள்வி

செவ்வாய்க்கிழமை, 7 ஜனவரி 2025      விளையாட்டு
Ravi-Shastri 2023 04 12

Source: provided

முகமது ஷமி எப்போதுதான் இந்திய அணிக்கு திரும்புவார்? என்று பி.சி.சி.ஐ.க்கு முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "முகமது ஷமி விஷயத்தில் பி.சி.சி.ஐ. என்ன செய்கிறது? என்பது எனக்கு புரியவில்லை. ஏனெனில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்துவரும் முகமது ஷமி இந்திய அணிக்கு பெரிய பங்கினை வழங்கக்கூடியவர். அவரை இவ்வளவு மாதங்களாக கண்காணித்து வரும் மருத்துவ குழுவால் ஏன் இன்னும் அவரது காயத்தை முழுமையாக சரி செய்ய முடியவில்லை. அவரது விஷயத்தில் பி.சிசி.ஐ. எந்த ஒரு தகவலையும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அவர்கள்தான் முகமது ஷமியை கண்காணித்து விரைவில் குணப்படுத்தியிருக்க வேண்டும்.

 

முகமது ஷமி இருந்திருந்தால் ஆஸ்திரேலியாவில் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோருக்கு உதவியாக இருந்திருக்கும். ஆனால் அவர் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. தற்போது உள்ளூர் தொடரில் முகமது ஷமி விளையாடி வந்தாலும் அவர் தேசிய அணிக்கு திரும்புவாரா? என்பது குறித்து இன்னும் புரியாமல் இருக்கிறது. பி.சி.சி.ஐ. அவர் விஷயத்தில் என்ன நினைக்கிறது? என்பது எனக்கு தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.

_______________________________________________________________________________________________

இந்தியாவின் அனாகத் சாம்பியன்

17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காவில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பாக டெல்லியை சேர்ந்த அனாகத் சிங் பங்கேற்றார். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய அனாகத் ஸ்குவாஷ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் அனாகத் சிங்குடன் எகிப்து நாட்டை சேர்ந்த மலிகா எல் கராக்ஸி மோதினார். முதல் செட்டை அனாகத் 4-11 என்ற கணக்கில் இழந்தார். அடுத்த செட்டை 11-9 என்ற கணக்கில் கைப்பற்றினார். 3-வது செட்டை 6-11 என்ற மீண்டும் இழந்தார். 

இதனையடுத்து நம்பிக்கையுடன் களமிறங்கிய அனாகத் 4-வது மற்றும் 5-வது செட்டை 11-5, 11-3 என்ற கணக்கில் எளிதாக வீழ்த்தினார். இதன்மூலம் 4-11, 11-9, 6-11, 11,5, 11-3 என்ற செட் கணக்கில் மலிகாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை அனாகத் வென்றார். 16 வயதான் அனாகத் இதற்கு முன்பு U-11 மற்றும் U-15 ஆகிய பட்டங்களை வென்றுள்ளார். கடந்த ஆண்டு U-17 போட்டியின் இறுதிபோட்டியில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________________________________

டெம்பா பவுமா புதிய சாதனை

பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 615 ரன்கள் குவித்தது. ரையான் ரிக்கெல்டன் 259 ரன்கள் எடுத்து அசத்தினார். அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 194 ரன்னில் சுருண்டு 'பாலோ-ஆன்' ஆனது. 421 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 122.1 ஓவர்களில் 478 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணிக்கு 58 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சிறிய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 7.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. 

நடப்பு தொடரில் ஏற்கனவே முதலாவது டெஸ்டில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்த தென்ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா டெஸ்டில் தொடர்ச்சியாக 7-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி இதுவரை டெஸ்ட்டில் தோல்வியே கண்டதில்லை. அவரது கேப்டஷிப்பில் தென் ஆப்பிரிக்கா அணி 9 டெஸ்ட்டில் விளையாடி உள்ளது. இதில் 8-ல் வெற்றியும் ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. இதன்மூலம் டெஸ்ட்டில் முதல் தோல்விக்கு முன் அதிக வெற்றிகளை பதிவு செய்த தென் ஆப்பிரிக்கா கேப்டன் என்ற மாபெரும் சாதனையை பவுமா படைத்துள்ளார். 

_______________________________________________________________________________________________

இந்திய ஜோடி முன்னேற்றம்

மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கியது. இந்த தொடர் வரும் 12-ம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் ரூ.12.5 கோடி பரிசுத் தொகைக்கான இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டு உள்ளனர். இந்நிலையில், இந்த தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் இணை, தாய்லாந்தின் ஓர்னிச்சா ஜோங்சதா போர்ன்பார்ன்- சுகித்தா சுவாச்சாய் இணையுடன் மோதியது. இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் இணை 21-10, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறியது. 

___________________________________________________________________________________________

மைக்கேல் வாகன் பாராட்டு

யார் கூறினாலும் ஆஷஸ் மட்டுமே சிறந்தது என்று மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். அதே சமயம் ஆஸ்திரேலியாவுக்கு போட்டியை கொடுப்பதில் இங்கிலாந்தை விட இந்தியா சிறந்த அணி என்று அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி மைக்கேல் வாகன் பேசியது பின்வருமாறு:- "எப்போதும் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதலே சிறப்பான போட்டியாகும். ஆனால் தற்சமயத்தில் ஆஸ்திரேலியா - இந்தியா சிறந்த போட்டியாக இருக்கிறது. ஆஷஸ் 150 வருட பழமை வாய்ந்தது. ஆனால் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல் 20 வருடங்களாக மட்டுமே இருக்கிறது. இந்தியா - ஆஸ்திரேலியா பார்ப்பதற்கு மிகவும் சிறந்த தொடர் என்று நீங்கள் சொல்லலாம்.

ஆனால் ஆஷஸ் இப்போதும் மிகப்பெரிய போட்டி என்று நினைக்கிறேன். இருப்பினும் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற கடந்த தொடரில் இங்கிலாந்து போதுமான போட்டியை கொடுக்கவில்லை. சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு நாங்கள் நிறைய போட்டியை கொடுத்து நல்ல தொடரை உருவாக்குகிறோம். ஆனால் இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்கள் சொந்த மண்ணிலும் வெளிநாட்டிலும் போட்டி மிகுந்ததாக இருக்கிறது. அதே சமயம் இந்த தொடரில் முதல் போட்டியை தவிர்த்து மற்ற போட்டிகளில் இந்திய அணியால் ஆஸ்திரேலியாவுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. ஆஸ்திரேலியா நல்ல கிரிக்கெட்டை விளையாடி எப்போதும் முன்னிலையில் இருந்தார்கள்" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து