முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: 2 ஆண்டுகளில் 18 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது

செவ்வாய்க்கிழமை, 7 ஜனவரி 2025      விளையாட்டு
India 2024-02-05

Source: provided

மும்பை : வருகிற 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக இந்திய அணி 18 போட்டிகளில் விளையாட உள்ளது.இந்திய அணி 2027 ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்டிலும் ஆடுகிறது. 

2019-ல் அறிமுகம்... 

இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவிடம் 1-3 என்ற கணக்கில் தோற்று டெஸ்ட் தொடரை இழந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2019-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் நியூசிலாந்து சாம்பியன் பட்டம் பெற்றது. 21-23-ல் நடைபெற்ற 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இந்திய அணி இந்த 2 தொடரிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டத்தை இழந்தது.

லார்ட்ஸ் மைதானத்தில்... 

3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. ஜூன் 11-ந்தேதி முதல் 15-ம் தேதி வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இறுதி ஆட்டம் நடக்கிறது. இந்திய அணி தொடரில் 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் வாய்ப்பை தவறவிட்டது. 

இங்கிலாந்து சென்று... 

2025-27-ம் ஆண்டுக்கான 4-வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 18 டெஸ்டில் விளையாடுகிறது. ஜூன்-ஜூலை மாதம் இங்கிலாந்து சென்று இந்திய அணி 5 டெஸ்டில் பங்கேற்கிறது. இதோடுதான் இந்தியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்குகிறது. அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீசுடன் 2 டெஸ்டில் விளையாடுகிறது. இந்த ஆண்டு இறுதியில் (டிசம்பர் மாதம்) தென் ஆப்பிரிக்காவுடன் உள்ளூரில் 2 டெஸ்டில் ஆடுகிறது. 

ஆஸ்திரேலியாவுடன்... 

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை சென்று 2 டெஸ்டிலும், அக்டோபர்-டிசம்பர் மாதம் நியூசிலாந்து சென்று 2 டெஸ்டிலும் பங்கேற்கிறது. இந்திய அணி 2027 ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்டிலும் ஆடுகிறது. சொந்த மண்ணில் இந்த தொடர் நடைபெறும். இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவிடம் 1-3 என்ற கணக்கில் தோற்று டெஸ்ட் தொடரை இழந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி உள்ளூரில் 9 டெஸ்டிலும், வெளிநாட்டில் 9 டெஸ்டிலும் விளையாடுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து