முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான தொடர் இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு

செவ்வாய்க்கிழமை, 7 ஜனவரி 2025      விளையாட்டு
Vashington-Sunder 2023-02-2

Source: provided

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அர்ஷ்தீப் சிங் அணியில் சேர்க்கப் படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுற்றுப்பயணம்... 

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 12-ந் தேதி முடிகிறது. இதனை தொடர்ந்து 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் பெறும் வீரர்களே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட வாய்ப்பு உள்ளது.

பும்ராவுக்கு ஓய்வு... 

இந்நிலையில் இங்கிலாந்து எதிரான தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய வீரர்கள் சிலர் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் சிராஜ்-க்கு டி20 தொடரில் ஓய்வும் ஒருநாள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் அணியில் இடம் பெறுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

தேர்ந்தெடுக்கபடலாம்... 

ஜெய்ஸ்வால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் ஓபராக செயல்படுகிறார். வாஷிங்டன் சுந்தர் மற்றும் அர்ஷ்தீப் சிங் இரு தொடரிலும் தேர்ந்தெடுக்கபடலாம் எனவுக் தகவல் வெளியாகி உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியை வருகிற 12-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து