முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஞ்சி கோப்பை தொடரில் கோலி, ரோகித், ஜெய்ஸ்வால்

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2025      விளையாட்டு
Verat Koil 2023 08 13

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பையின் அடுத்த கட்ட லீக் ஆட்டங்கள் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளன. இதில் முன்னணி வீரர்களான ரோகித், ஜடேஜா, சிராஜ், பண்ட் உள்ளிட்ட பல வீரர்கள் விளையாட உள்ளனர்.

கடும் விமர்சனங்கள் 

சமீபத்தில் நடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வி கண்டது. இதில் ரோகித் சர்மா, விராட்கோலி உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. இதன் காரணமாக ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் அனைவரும் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்தினர். இதையடுத்து உடல் தகுதி பிரச்சினை இல்லாத சமயத்தில் உள்ளூர் போட்டிகளில், கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த வீரர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தியது. இதனால் உள்ளூர் போட்டிகளில் முன்னணி வீரர்கள் விளையாட உள்ளனர்.

விளையாட தயார்

இதில் நட்சத்திர வீரரான விராட் கோலி, கழுத்து வலி காரணமாக 23-ம் தேதி தொடங்கும் டெல்லி அணியின் சவுராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் இடம்பெறவில்லை. இதனால் அவர் மீது சிலர் குறை கூறினர். இந்நிலையில் டெல்லி அணியின் அடுத்த லீக் ஆட்டத்தில் (30-ந்தேதி ரெயில்வே அணிக்கு எதிராக) விளையாட தயாராக இருப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். இதனை டெல்லி அணி நிர்வாகமும் உறுதி செய்துள்ளது.  விராட் கோலி கடைசியாக 2012-ம் ஆண்டு உத்திரபிரதேசத்துக்கு எதிராக ரஞ்சி போட்டியில் விளையாடி இருந்தார். அதன் பிறகு தற்போதுதான் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை அணியில்...

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 23-ம் தேதி ஜம்மு - காஷ்மீர் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த ஆட்டம் மும்பையில் உள்ள எம்.சி.ஏ-பி.கே.சி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான மும்பை அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். கேப்டனாக அஜிங்க்ய ரஹானே தொடர்கிறார்.

விமர்சனங்களுக்கு...

சொந்த மண்ணில் நியூஸிலாந்துக்கு எதிராகவும், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் ரோகித் சர்மாவின்  பார்ம் பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்திருந்தது. இதைத் தொடர்ந்து ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து இந்திய வீரர்களும் உள்ளூர் தொடர்களில் விளையாட வேண்டும் என பி.சி.சி.ஐ. தெரிவித்திருந்தது. இதன் காரணமாக ரோகித் சர்மா, பார்மை மீட்டெடுக்கும் விதமாக ரஞ்சி கோப்பையில் களமிறங்குகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து