முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயிரைக் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரை நேரில் சந்தித்து சைப் அலிகான் நன்றி

புதன்கிழமை, 22 ஜனவரி 2025      இந்தியா
saiif-ali-khan-----

மும்பை, மருத்துவமனையில் அனுமதித்த ஆட்டோ ஓட்டுநரை நேரில் சந்தித்த சைப் அலிகான் நன்றி தெரிவித்தார்.

மும்பையில் கடந்த 16-ஆம் தேதி அதிகாலை சைப் அலி கான் வீட்டுக்குள் புகுந்த ஷரீபுல், அவரை 6 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பினாா். படுகாயமடைந்த சைப் அலி கானை வீட்டுப் பணியாளா்கள் மீட்டு, ஆட்டோவில் ஏற்றி பாந்த்ரா பகுதியில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அவருடைய தண்டுவடத்தில் சிக்கியிருந்த 2.5 அங்குல நீளமுள்ள கத்தியின் உடைந்த பகுதி, அவசர அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதையடுத்து 5 நாள்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த சைப் அலிகான் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வீடு திரும்பினார். அதற்கு முன்னதாக தனது உயிரைக் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர் பஜன் சிங் ராணாவை மருத்துவமனைக்கு நேரில் வரவழைத்து சைஃப் அலிகான் நன்றி தெரிவித்துள்ளார்.

சைப் அலிகான் ஆட்டோ ஓட்டுநரை நேரில் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சைப் அலி கானை கத்தியால் குத்திய ஷரீபுலை மூன்று நாள் தீவிர தேடுதல்களுக்குப் பிறகு, மும்பைக்கு அடுத்து உள்ள தாணே நகரின் புறநகா் வனப்பகுதியில் பதுங்கியிருந்தபோது காவல் துறையினா் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஷரீபுல் தனது பெயரை விஜய் தாஸ் என மாற்றிக் கொண்டு வங்கதேசத்திலிருந்து டாக்கி நதி வழியாக 7 மாதங்களுக்கு முன் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து