முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை கோரும் மேற்குவங்க அரசின் அப்பீல் வழக்கில் கொல்கத்தா ஐகோர்ட் முக்கிய முடிவு

புதன்கிழமை, 22 ஜனவரி 2025      இந்தியா
Kolkata-High-Court 2023 04

Source: provided

கொல்கத்தா: மரண தண்டனை விதிக்கக்கோரி சஞ்சய் ராய் வழக்கில் மாநில அரசு மேல்முறையீடு செய்துள்ள நிலையில் மாநில அரசு அப்பீல் செய்ய முடியாது என்று சி.பி.ஐ. தரப்பில் வாதம் செய்யப்பட்ட நிலையில், கொல்கத்தா ஐகோர்ட், சி.பி.ஐ., சஞ்சய் ராய் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் பதில்களை கேட்க   நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மேற்கு வங்க அரசு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அதில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

இதுகுறித்த வழக்கினை விசாரித்து வரும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் டெபாங்ஷூ பசாக் மற்றும் எம்டி ஷப்பர் ரஷிதி அடங்கிய அமர்வு முன்பு சி.பி.ஐ. கூறுகையில், “தண்டனை போதாமையின் அடிப்படையில் தீர்ப்பினை எதிர்த்து விசாரணை அமைப்பு மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும். இந்த வழக்கினை சி.பி.ஐ. -யே விசாரணை செய்தது என்பதால் மாநில அரசு மேல் முறையீடு செய்ய முடியாது என்று தெரிவித்தது.

மாநில அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், “இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை முதலில் பதிவு செய்தது மாநில அரசின் போலீஸாரே. பின்னரே இந்த வழக்கு சி.பி.ஐ. க்கு மாற்றப்பட்டது. சட்ட ஒழுங்கு மாநில அரசின் வரம்புக்கு உட்பட்டது.” என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த உயர் நீதிமன்ற அமர்வு, மாநில அரசின் கோரிக்கையை ஏற்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்வதற்கு முன்பு, சி.பி.ஐ. , சஞ்சய் ராய் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் பதில்கள் கேட்ட பின்பு முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தது. இந்த வழக்கு ஜன.27-ம் தேதி மீண்டும் விசாரிக்கப்பட இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து