முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகங்கை மாவட்டத்திற்கு மூன்று முக்கிய திட்டங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

புதன்கிழமை, 22 ஜனவரி 2025      தமிழகம்
CM 2024-12-02

Source: provided

சிவகங்கை : புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம் உள்பட சிவகங்கைக்கு மூன்று முக்கிய திட்டங்களை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சிவகங்கை மாவட்ட அரசு விழாவில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். அப்போது அவர் பேசியதாவது, முதல் அறிவிப்பாக, இப்போது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக இருக்கும் கட்டிடம் கட்டிப்பட்டு 40 ஆண்டுகள் ஆகி, அது பழுதடைந்து, இடப்பற்றாக்குறை சூழ்நிலையில் இருக்கிறது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அதனால், பல துறைகளின் அலுவலகங்கள் வாடகைக் கட்டிடங்களில் இயங்கிக்கொண்டு இருப்பதாலும், எல்லா மாவட்ட அலுவலகங்களும் ஒரே இடத்தில் சிறப்பாக செயல்படும் வகையில் 89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கூடுதல் கட்டிடம் கட்டிப்படும்.

இரண்டாவது அறிவிப்பு - சிங்கம்புணரி, திண்டுக்கல் மற்றும் காரைக்குடி நகரங்களுக்குச் செல்லும் வாகனங்கள் - திருப்பத்தூர் நகரப் பகுதிக்குள் வராமல் செல்லும் வகையில், திருப்பத்தூர் நகரத்திற்கு 50 கோடி ரூபாய் செலவில் புதிய புறவழிச்சாலை அமைக்கப்படும். மூன்றாவது அறிவிப்பு - கடந்த ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, விரிவாக்கப்பட்ட காரைக்குடி மாநகராட்சிக்கு புதிய மாநகராட்சி அலுவலகம் அமைக்க 30 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். இப்படி, நம்முடைய அரசு, துல்லியமாகவும் – துரிதமாகவும் செயல்பட்டு வருகிறது! அதனால்தான், ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்ன என்ன செய்திருக்கிறோம் என்று ஒவ்வொரு மேடையிலும் நான் புள்ளிவிவரத்துடன் சொல்லி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து