முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடலூர் பயணம்

வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2025      தமிழகம்
Stalin 2025-02-20

Source: provided

கடலூர்: 2 நாட்கள் கள ஆய்வுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடலூர் பயணிக்கிறார். கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற உள்ள விழாவில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவற்ற பணிகள் தொடங்கி வைக்க உள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார். கடலூர் மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் திறந்து வைக்க உள்ளார். மேலும், வருவாய்த்துறை, வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வாயிலாக அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார்.

கடலூர் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்  இன்றும், நாளையும் இரு தினங்கள்  புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவற்ற பணிகளை திறந்து வைத்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார். இந்த விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ கணேசன் ஆகியோர்  ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் அமைச்சர்கள் கூறுகையில், தமிழக முதல்வர் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு துறைகளின் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் பொருளாதாரத்தில் மேன்மை அடையும் வகையிலும் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இந்த நிலையில் இன்று கடலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்து கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற உள்ள விழாவில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவற்ற பணிகள் தொடங்கி வைக்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து நாளை (22-ம் தேதி) வேப்பூர் வட்டம் திருப்பெயர் பகுதியில் நடைபெற உள்ள பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் கலந்து கொள்ள உள்ளார்.  மேலும் முதல்வர் கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியின் கீழ் ரூ.498.79 கோடி நிவாரண நிதி உதவியாக 5,18,783 விவசாயிகளுக்கு வழங்குகிறார். 

ஃபெஞல் புயல் கனமழை மற்றும் தென்பனையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.166.68 கோடி மதிப்பீட்டிலும் தோட்டக்கலை பயிர்களுக்கு நிவாரணத்தொகையாக ரூ.42.73 கோடி மதிப்பீட்டிலும் 2 லட்சத்து 1344 விவசாயிகளுக்கு ரூ.209.41 கோடி மதிப்பிட்டிலும் நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது” என தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து