முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் அணியிலிருந்து ரிஸ்வான், பாபர் அசாம் நீக்கம்

செவ்வாய்க்கிழமை, 4 மார்ச் 2025      விளையாட்டு
Babar-Assam 2023-09-27

Source: provided

லாகூர் : நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து   முக்கிய வீரர்களான கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் நட்சத்திர ஆட்டக்காரர் பாபர் அசாம் இருவரும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். 

டி20 தொடர்...

நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான்  அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் இருந்து நட்சத்திர ஆட்டக்காரர் பாபர் அசாம்,  முகமது ரிஸ்வான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். டி20 அணிக்கு புதிய கேப்டனாக இளம் வீரர் சல்மான் அலி அகாவும், துணைக் கேப்டனாக சதாப் கானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீக்கம்...

நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் சொந்த மண்ணில் நடந்த போட்டியிலேயே ஒரு வெற்றிகூட பெறாமல் வெளியேறியது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தது. இதனால் டி20 கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரிஸ்வான் ஒருநாள் அணியின் கேப்டனாக தொடர்கிறார். இருப்பினும், பாபர் அசாம் ஒருநாள் அணிக்கு அழைக்கப்பட்ட நிலையில் சௌத் சாகீல், கம்ரான் குலாம் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களைத் தவிர்த்து சாகீன் ஷா அப்ரிடி, ஹாரீஸ் ராஃப் இருவரும் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அணி விவரம்...

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் பாகிஸ்தான் அணி மார்ச் 16 ஆம் தேதி தொடங்கும் 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

ஒருநாள் அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன்), சல்மான் அலி அகா, அப்துல்லா சாபீக், அப்ரார் அகமது, அகீஃப் ஜவேத், பாபர் அசாம், பஹீம் அஸ்ராப், இமாம் உல் ஹக், குஷ்தில் ஷா, முகமது அலி, முகமது வாசிம் ஜூனியர், முகமது இர்பான் கான், நசீம் ஷா, சுஃப்யான் முகீம், தயாப் தாஹீர்.

டி20 அணி: சல்மான் அலி அகா(கேப்டன்), சதாப் கான், அப்துல் சமத், அப்ரார், ஹாரீஸ் ராப், ஹசன் நவாஸ், ஜஹாந்தத் கான், குஷ்தில் ஷா, முகமது அபாஸ், முகமது அலி, முகமது ஹரிஸ், முகமது இர்பான் கான், ஒமைர் பின் யூசுப், ஷாகீன் ஷா, சுப்யான் முகீம், உஸ்மான் கான்.8

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து