முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய அதிபர் புதினை கொல்ல சதியா? - கார் வெடித்து சிதறியதால் அதிர்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 30 மார்ச் 2025      உலகம்
Putin 2024 08 11

Source: provided

மாஸ்கோ : ரஷியாவின் உளவு அமைப்பான எப்.எஸ்.பி. தலைமை அலுவலகம் அருகே அதிபர் புதினுக்கு சொந்தமான கார் வெடித்து சிதறி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்ய அதிபராக இருக்கும் புதின், அமெரிக்காவிற்கு அடுத்து உலகில் அதிகபட்ச பாதுகாப்பைக் கொண்ட தலைவர்களில் ஒருவர் ஆவார். அவரது உயிருக்குப் பல அச்சுறுத்தல்கள் இருப்பதால் அவரை பாதுகாக்க ரஷ்ய சீக்ரெட் சர்வீஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவர் ஒரு இடத்தற்குச் செல்வதற்குப் பல வாரங்களுக்கு முன்பே கூட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கிவிடும் அந்த அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகமாக இருக்கும். 

இந்தநிலையில், புதினின் பாதுகாப்பு கான்வாயில் இடம்பெற்றிருந்த கார் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. ரஷியாவை சேர்ந்த ஆரஸ் நிறுவனம் தயாரித்த இந்த ஆரஸ் லிமோசின் கார் மாஸ்கோ சாலையில் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த கார் ரஷ்ய உளவுத்துறையான எப்.எஸ்.பி. தலைமையகத்திற்கு அருகே நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், திடீரென அந்த கார் வெடித்துத் தீப்பிடித்தது. இந்த காரின் மதிப்பு சுமார் ரூ.3 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. முதலில் இஞ்சனில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பிறகு அது மெல்ல உட்புறம் வரை பரவியதாகத் கூறப்படுகிறது.

இந்த கார் ரஷ்ய அதிபர் மாளிகையின் அதிபர் சொத்து மேலாண்மைத் துறைக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. இருப்பினும், திடீரென கான்வாய் கார் வெடித்துச் சிதற என்ன காரணம் கார் வெடித்துச் சிதறிய போது உள்ளே யாராவது இருந்தார்களா என்பது போன்ற தகவல்கள் தெளிவாகத் தெரியவில்லை. அதேநேரம் இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் அல்லது உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று டெய்லி எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

கார் வெடித்த சம்பவம் ரஷ்ய அதிபர் புதினை கொல்ல சதியாக இருக்கலாமோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. அதேநேரம் இது சம்பவம் தொடர்பாக ரஷ்ய அரசு இதுவரை எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. ரஷ்ய அதிபர் புதினை கொலை செய்யச் சதித்திட்டங்கள் நடந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சம்பவம் ரஷியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago
View all comments

வாசகர் கருத்து