முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயிரிழப்பு 10 ஆயிரமாக உயர்வு? - மியான்மர் நிலநடுக்க மீட்பு பணிகளில் இந்திய வீரர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 30 மார்ச் 2025      உலகம்
Myanmar-earthquake-2025-03-

Source: provided

நேப்பிடா : மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 10,000 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று மியான்மர் சமூக ஆர்வலர்கள் அளித்த தகவல்களின் பேரில் சர்வதேச ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன

 .இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் (பர்மா) மோனிவா நகருக்கு அருகே  3 நாட்களுக்கு முன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.7 ஆக பதிவானது.  இதில் மியான்மர் தலைநகர் நேப்பிடா, சாகைங், மண்டலை, பைகோ, மாகுவே, ஷான் ஆகிய 6 மாகாணங்கள் நிலநடுக்கத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.  

இந்நிலையில்  மியான்மருக்கு உதவுவதற்காக 'ஆபரேசன் பிரம்மா' என்ற நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதன்படி 15 டன் நிவாரண பொருட்களுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 80 வீரர்கள் சிறப்பு விமானத்தில் மியான்மருக்கு சென்றுள்ளனர். இந்திய ராணுவத்தின் சார்பில் மியான்மரில் தற்காலிக மருத்துவமனை தொடங்கப்பட்டு உள்ளது. இந்திய கடற்படையை சேர்ந்த ஐஎன்எஸ் சாவித்ரி கப்பலில் 40 டன் நிவாரண பொருட்கள் மியான்மருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இந்தியாவை சேர்ந்த சுமார் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் தாய்லாந்து, மியான்மருக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.

மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்திலும் 3 நாட்களுக்கு முன்  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் தலைநகர் பாங்காக்கில் புதிதாக கட்டப்பட்ட 30 மாடி கட்டிடம் இடிந்து நொறுங்கியது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 68 பேர் படுகாயம் அடைந்தனர். 101 பேர் கட்டிடத்தில் சிக்கி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, மியான்மர் சமூக ஆர்வலர்கள் அளித்த தகவல்களின்பேரில் சர்வதேச ஊடகங்கள், நிலநடுக்க பாதிப்பு குறித்த செய்திகளை வெளியிட்டுள்ளன. அதில்  மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 10,000 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்திருக்கக்கூடும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago
View all comments

வாசகர் கருத்து