முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் என்கவுன்ட்டர்: உயிரிழந்த போலீஸாரின் எண்ணிக்கை 4-ஆக உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 30 மார்ச் 2025      இந்தியா
Kashmir 2024-03-28

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுன்ட்டரில் உயிரிழந்த போலீஸாரின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.  

ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டம் ராஜ்பாக் பகுதியில் ஜக்கோலே கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு 2 நாட்களுக்கு முன்பு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் போலீஸார், ராணுவத்தினர், மத்திய ரிசர்வ் போலீஸார் அடங்கிய சிறப்பு ஆபரேஷன் குழுவினர் என 4 பிரிவினரும் அப்பகுதிக்கு விரைந்தனர்.

போலீஸார் அப்பகுதிகயை சுற்றி வளைத்ததை அறிந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். காலை தொடங்கிய இந்தத் துப்பாக்கிச்சூடு மாலை வரை நீடிதத்து. இந்த என்கவுன்ட்டரில் மொத்தம் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் 3 போலீஸார் உயிரிழந்ததாகவும், டிஎஸ்பி உள்பட 7 போலீஸார் காயமடைந்ததாகவும் தெரியவந்தது.

இந்நிலையில் என்கவுன்ட்டர் நடைபெற்ற பகுதியில் மேலும் ஒரு போலீஸ்காரரின் உடலை போலீஸார்  கைப்பற்றினர். இதனால் தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுன்ட்டரில் உயிரிழந்த போலீஸாரின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது.

நேற்றும் போலீஸாரின் தேடுதல் வேட்டை கதுவா பகுதியில் தீவிரம் அடைந்துள்ளது. கதுவா, அதைச் சுற்றிலுள்ள பில்லாவர் உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago
View all comments

வாசகர் கருத்து