முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 நாள் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலம் தமிழ்நாடு: அமைச்சர் ரகுபதி

ஞாயிற்றுக்கிழமை, 30 மார்ச் 2025      தமிழகம்
Raghupathi 1

Source: provided

சென்னை : 100 நாள் வேலை திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வரும் மாநிலம் தமிழ்நாடு தான் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- "100 நாள் வேலையில் முறைகேடு நடைபெறுகிறதா? என்பதை பா.ஜ.க. அரசு விசாரணை ஆணையம் அமைத்து கண்டுபிடிக்கட்டும். இந்தியாவிலேயே 100 நாள் வேலை திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வரும் மாநிலம் தமிழ்நாடு தான்.

தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் மாநிலங்களில் தொகுதிகள் குறையாது என்று கூறும் உள்துறை அமைச்சர், வட மாநிலங்களில் தொகுதிகள் கூடாது என்று உறுதியளிக்க தயாரா? அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் நலனுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாக கூறுகிறார். அதே சமயம், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறுகிறார். இதில் யார் பொய் சொல்கிறார் என்பது விரைவில் தெரியும்." இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago
View all comments

வாசகர் கருத்து