முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் வானிலை முன்னறிவிப்பில் இந்தி மொழி சேர்க்கப்பட்டதால் பரபரப்பு

வியாழக்கிழமை, 27 மார்ச் 2025      தமிழகம்
Weather 2024-12-02

சென்னை, தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தொடர்பாக சர்ச்சையாகி வரும் நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

வழக்கமாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகள் மட்டுமே இடம்பெறும். தற்போது இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா கூறியிருப்பதாவது:- சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் இந்தி மொழியை சேர்க்க இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இந்திய வானிலை மைய அதிகாரிகள் அறிவுறுத்தலால், இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தியில் முன்னறிவிப்பு வெளியிட சென்னை மையத்தில் மொழிபெயர்ப்பாளரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே மும்மொழிக்கொள்கை மிகப்பெரிய சர்ச்சையாகி இருக்கும் சூழலில், தற்போது மத்திய அரசு சார்பில் இந்திமொழியை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 day ago
View all comments

வாசகர் கருத்து