முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம்

வியாழக்கிழமை, 27 மார்ச் 2025      இந்தியா
Telangana-Assembly

ஐதராபாத், தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

மக்கள் தொகை அடைப்படையில் தொகுதி மறுசீரமைப்பை செய்யக்கூடாது என அம்மாநில முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக தெலுங்கானா அரசாங்கம் நிறைவேற்றி உள்ள தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:-

வரவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு பணி, மாநிலங்களுடன் வெளிப்படையான ஆலோசனைகள் இல்லாமல் திட்டமிடப்பட்டுள்ள விதம் குறித்து இந்த அவை தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது. மத்திய அரசால் முன்னெடுக்கப்படும் மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தை திறம்பட செயல்படுத்திய மாநிலங்கள், அதன் விளைவாக மக்கள்தொகைப் பங்கு குறைந்துள்ளதால், அவை தண்டிக்கப்படக்கூடாது, எனவே, மக்கள் தொகை தொகுதி மறுசீரமைப்பிற்கான ஒரே அளவுகோலாக இருக்கக்கூடாது.

மேலும், பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பொருட்டு, ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014 மற்றும் சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாநில சட்டமன்றத்தில் உள்ள இடங்களின் எண்ணிக்கையை உடனடியாக 119 இலிருந்து 153 ஆக அதிகரிக்க வேண்டும் என்று சபை தீர்மானிக்கிறது. இதற்காக தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களை அறிமுகப்படுத்துமாறு இந்த சபை மத்திய அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 day ago
View all comments

வாசகர் கருத்து