முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கு நிதியை உடனே விடுவிக்க வேண்டும்: நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை

வியாழக்கிழமை, 27 மார்ச் 2025      இந்தியா
Parliament-1

புதுடெல்லி, புதிய கல்விக் கொள்கையின் பள்ளிகளுக்கான பி.எம்.ஸ்ரீ திட்டத்தை  ஏற்காத மாநிலங்களுக்கு  சர்வ சிக்‌ஷா அபியான் நிதியை உடனடியாக விடுவிக்க நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.

புதிய தேசிய கல்விக் கொள்கையை (என்.இ.பி) செயல்படுத்த தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு மறுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.2,100 கோடிக்கும் அதிகமான நிதியை மத்திய கல்வித் துறை அமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளது. இப்பிரச்சனையில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே வார்த்தைப் போரும் நடைபெற்று வருகிறது.

இந்தச் சூழலில் என்.இ.பி. 2020 அல்லது பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கும் நிதி எதுவும் நிலுவையில் இல்லாததை உறுதி செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.

இது குறித்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திக்விஜய் சிங் தலைமையிலான நிலைக் குழுவின் அறிக்கையின் விவரம்: பி.எம்.ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடாத சில மாநிலங்களுக்கு சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்துக்கான நிதியை விடுவிக்காததை குழு கவனித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சில மாநிலங்களுக்கு  பெருந்தொகை நிலுவையில் உள்ளது.

36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 33 மாநிலங்கள் பி.எம்.ஸ்ரீக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. மேலும், இந்தத் திட்டத்தை செயல்படுத்தியும் வருகின்றன. தேசிய அளவில் மதிப்பீடு மற்றும் பாடத்திட்டத்தில் சமமான நிலையை உருவாக்க என்.இ.பி. 2020 ஒரு முன்மாதிரியான பள்ளிகளை உருவாக்குகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் இணக்கமாகப் பேசி இந்தப் பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்க்க வேண்டும். நிலுவையில் உள்ள நிதியை முன்னுரிமை அடிப்படையில் விடுவிக்க வேண்டும்.

 

மத்திய ஒதுக்கீடுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதால், ஆசிரியர்கள் மற்றும் அதன் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க இந்த மாநிலங்கள் தங்கள் சொந்த நிதியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. பி.எம்.ஸ்ரீ போன்ற தனித் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யாததற்காக சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் நிதியை மாநிலங்களுக்கு நிறுத்தி வைப்பது நியாயமானது அல்ல. கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கு நிலுவையில் உள்ள சர்வ சிக்‌ஷா அபியான் நிதியை உடனடியாக விடுவிக்க குழு பரிந்துரைத்துள்ளது என்று அந்த சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 day ago
View all comments

வாசகர் கருத்து