முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேச தேசிய தினம்: முகமது யூனுஸுக்கு பிரதமர் மோடி கடிதம்

வியாழக்கிழமை, 27 மார்ச் 2025      இந்தியா
Modi 2024-06-10

புதுடெல்லி, இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் வங்கதேச தேசிய தினம் சான்றாக இருக்கிறது என அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வங்கதேச தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, பேராசிரியர் முகமது யூனுஸுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,   "இந்த நாள் நமது இருதரப்பு கூட்டாண்மைக்கு அடித்தளமிட்ட நமது பகிரப்பட்ட வரலாறு மற்றும் தியாகங்களுக்கு ஒரு சான்றாக நிற்கிறது. ஒருவரின் நலன் மற்றும் கவலைகளை மற்றொருவர் பரஸ்பரம் உள்வாங்கிக் கொண்டு உணர்வுடன் செயல்படுவதன் மூலம், அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தவும் அதன் அடிப்படையில் கூட்டாண்மையை கொண்டு செல்லவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.

 வங்கதேசத்தின் விடுதலைக்காக பாகிஸ்தானுக்கு எதிராக போரிட்டு வெற்றி பெற்ற இந்தியா, மார்ச் 26-ம் தேதியை வெற்றி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. இந்தியாவால் விடுதலைப் பெற்ற நாடு என்பதால், வங்கதேசம் இந்தியாவுடன் நல்லுறவைக் கொண்டிருந்தது. அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றார்.

இதையடுத்து, வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக பெரும்பான்மை முஸ்லிம்கள் நடத்திய தாக்குதல்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. மேலும், வங்கதேசத்தில் வாழும் இந்து சிறுபான்மையினரின் நிலை குறித்து இந்தியத் தலைவர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர். இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு சீராக இல்லை.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 day ago
View all comments

வாசகர் கருத்து