முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாட்ஸ்ஆப் சாட் மூலம் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு: நிர்மலா சீதாராமன் தகவல்

வியாழக்கிழமை, 27 மார்ச் 2025      இந்தியா
Nirmala 2024-12-07

புதுடெல்லி, தனிநபர்களின் வாட்ஸ்அப் சாட்கள் மூலம் ரூ.200 கோடி வரி ஏய்ப்புக் கண்டறியப்பட்டதாக வருமான வரி மசோதா மீது நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

60 ஆண்டுகள் பழைமையான வருமான வரிச் சட்டத்துக்கு மாற்றாக புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய வருமான வரி மசோதா, 2025-ஐ ஆதரித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், வாட்ஸ்ஆப் சாட்கள் மூலம் கணக்கில் வராத ரூ.200 கோடி பணம் கண்டறியப்பட்டு வரி ஏய்ப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருப்பது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது.

அது மட்டுமல்லாமல், கூகுள் மேப் பயன்படுத்தியதன் அடிப்படையில் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இன்ஸ்டாகிராம் கணக்குகள் மூலம் பினாமி சொத்துகளின் உரிமையாளர்கள் கண்டுபிடிக்கப் பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மக்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பயன்படுத்த அதிகாரம் அளிப்பதன் மூலம், மிகவும் தீவிரமான வரி ஏய்ப்புகள் மற்றும் நிதி முறைகேடுகள் பலவும் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்படுகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 21 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 21 hours ago
View all comments

வாசகர் கருத்து