முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீருக்கு வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார்

வியாழக்கிழமை, 27 மார்ச் 2025      இந்தியா
Vande-Bharat-train 2024-03-

ஸ்ரீநகர், காஷ்மீருக்கு முதல் முறையாக வந்தே பாரத் ரெயில் சேவையை  பிரதமர் மோடி அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார்

ஜம்மு- காஷ்மீருக்கு முதல் முறையாக நேரடி ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி பிரதமர் மோடி இந்த ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார்.

கத்ரா மற்றும் ஸ்ரீநகர் பாரமுல்லா இடையே முதல் முறையாக வந்தே பாரத் ரெயில் இயக்கப்படலாம் என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ரெயிலை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.

இந்த விழாவில் மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, அம்மாநில முதல்- அமைச்சர் உமர் அப்துல்லா ஆகியோர் பங்கேற்கின்றனர். பின்னர் பிரதமர் மோடி உலகின் மிக உயரமான செனாப் ரெயில் பாலத்தை பார்வையிட உள்ளார். கத்ராவில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 21 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 21 hours ago
View all comments

வாசகர் கருத்து