முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறக்குமதி வாகனங்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வியாழக்கிழமை, 27 மார்ச் 2025      உலகம்
Trump 2023-04-13

வாஷிங்டன், அமெரிக்காவில் இறக்குமதி வாகனங்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு கார்கள் மற்றும் அதன் உதிரிபாகங்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த புதிய உத்தரவு ஏப்ரல் 3, முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப் இது தொடர்பாக கூறுகையில் "அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படாத எல்லா கார்களுக்கும் இந்த 25 சதவீதம் வரி பொருந்தும் என்று கூறினார்.

டிரம்பின் இந்த முடிவு அமெரிக்க உள்நாட்டு வாகனத் தொழிலை மேம்படுத்துவதற்காகவும், உள்ளூர் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்காகவும் எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது. டிரம்பின் இந்த உத்தரவால், கனடா, மெக்ஸிகோ, ஜப்பான், தென் கொரியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் கார்கள் இந்த வரி உயர்வால் நேரடியாக பாதிக்கப்படும். இதனால், அந்த நிறுவன கார்களின் விலை உயரக்கூடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 day ago
View all comments

வாசகர் கருத்து