முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வக்பு சட்டத்திருத்தம் குறித்து விவகாரம்: சட்டப்பேரவையில் இ.பி.எஸ்.க்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

வியாழக்கிழமை, 27 மார்ச் 2025      தமிழகம்
CM 2024-12-02 (2)

Source: provided

சென்னை: எடப்பாடி பழனிசாமி அடுத்தமுறை டெல்லி செல்லும்போது வக்பு சட்டத்திருத்தம் குறித்து வலியுறுத்த வேண்டுகோள் வைக்கிறேன் என்று நேற்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து முன்மொழிந்தார். பின்னர் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

வக்பு தீர்மானத்திற்கு பாஜக மட்டும் எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து வெளியேறியது. அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தன. இதனையடுத்து வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், அ.தி.மு.க.வினருக்கு நான் வைக்கும் கோரிக்கை... நேற்று முன்தினம் (கடந்த 3 தினங்களுக்கு முன்பு) இதே அவையில் இருமொழிக் கொள்கை பிரச்சினை குறித்து பேசுகையில் நான் ஒன்று சொன்னேன், எதிர்க்கட்சித் தலைவர் டெல்லி சென்றிருக்கிறார். அங்கு யாரை சந்திக்க உள்ளார் என்ற செய்தியும் கிடைத்திருக்கிறது என்று கூறினேன்.

ஆனால் டெல்லியில் என்னுடைய கட்சி அலுவலகத்தை பார்வையிட வந்தேன் என்று சொன்ன எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாலையில், கார்கள் மாறி மாறி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார். அது தவறில்லை; அங்கு போய் தமிழகத்திற்கு வேண்டிய உரிமைகளை கேட்டிருக்கிறேன் என்று சென்னைக்கு வந்த பிறகு தெரிவித்துள்ளார். அதற்காக இந்த அவையின் சார்பில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எப்படி, இருமொழிக்கொள்கை குறித்து வலியுறுத்தி வந்துள்ளேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சொன்னாரோ, அது போலவே அடுத்தமுறை டெல்லி செல்லும்போது வக்பு சட்டத்திருத்தம் குறித்து வலியுறுத்த வேண்டுகோள் வைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 21 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 21 hours ago
View all comments

வாசகர் கருத்து