முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாஸ்மாக் மீது விசாரணை நடத்த இந்திய போட்டி ஆணையம் உத்தரவு

வியாழக்கிழமை, 27 மார்ச் 2025      இந்தியா
Tasmac-Shop 2023 04 25

Source: provided

புதுடெல்லி: டாஸ்மாக் மீது விசாரணை நடத்த இந்திய போட்டி ஆணையம் உத்தரவு விடுத்துள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் குறிப்பிட்ட சில ரக பீர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து கொள்முதல் செய்து விற்பனை செய்வதாகவும், பிற ரகங்கள் குறைந்த அளவிலேயே விற்கப்படுவதாகவும் இந்திய போட்டி ஆணையத்தில் (சி.சி.ஐ.) புகார் செய்யப்பட்டு உள்ளது. டாஸ்மாக்கின் இந்த நடவடிக்கை வர்த்தக போட்டியை குறைப்பதாக குற்றம் சாட்டப்பட்டு இருப்பதுடன், வாடிக்கையாளர்களின் தேர்வு செய்யும் உரிமையை குறைப்பதுடன், நியாயமான வர்த்தக போட்டியை தடுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த இந்திய போட்டி ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி 60 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சி.சி.ஐ. இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.முன்னதாக இந்த குற்றச்சாட்டை மறுத்திருந்த டாஸ்மாக் நிர்வாகம், தங்கள் கொள்முதல் நடைமுறையானது தானியங்கி முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், சராசரி விற்பனை கணக்கீட்டு முறையை அடிப்படையாகக் கொண்டது எனவும் கூறியிருந்தது.

அந்தவகையில் முந்தைய மாத விற்பனை மற்றும் இருப்பு நிலவரத்தின் அடிப்படையில் சாப்ட்வேர் மூலம் ஒவ்வொரு மாத தொடக்கத்தில் கொள்முதல் ஆர்டர் தயார் செய்யப்பட்டு வருவதாக கூறியுள்ள டாஸ்மாக் நிர்வாகம், நுகர்வோரின் விருப்பம் மற்றும் தேவையை பூர்த்தி செய்யும் உற்பத்தியாளரின் திறன் அடிப்படையிலேயே குறிப்பிட்ட ஒரு ரகத்தின் விற்பனை நடைபெறுகிறது என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 day ago
View all comments

வாசகர் கருத்து