முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை:அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

வியாழக்கிழமை, 27 மார்ச் 2025      தமிழகம்
TRP Raja

Source: provided

சென்னை: தமிழ்நாடு ஏற்றுமதியில் சாதனை படைத்து வருவதாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- 

மின்னணு துறையில், இந்த நிதியாண்டு பிப்ரவரி மாதம் வரை தமிழ்நாடு தேசிய ஏற்றுமதியில் 37 சதவீதத்தை ஏற்றுமதி செய்து பெரும் சாதனை படைத்துள்ளது. 2-ம் இடத்தில் கர்நாடகம் 20 சதவீதம் பங்குடன் உள்ளது. ஆந்திரா 10-வது இடத்தில் உள்ளது. 2021ல் 1.86 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஏற்றுமதி, திராவிட மாடல் ஆட்சியில் மளமளவென வளர்ந்து, இன்று 12.5 பில்லியன் அமெரிக்க டாலரை தாண்டி உயர்ந்து வருகிறது. நாம் நாடுகளுடன் போட்டிபோட்டு முதலீடுகளை ஈர்க்கிறோம். சிலர் நம்மை விட பின்தங்கியுள்ள மாநிலங்களுடன் ஒப்பீடு செய்ய முயல்கிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க நினைக்கும் வஞ்சகக் கூட்டம் கதறக் கதற தமிழ்நாடு முன்னேறிக் கொண்டே இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 day ago
View all comments

வாசகர் கருத்து