முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்

வியாழக்கிழமை, 27 மார்ச் 2025      தமிழகம்
Annamalai 2024 11 20

Source: provided

சென்னை: அண்ணாமலை திடீர் டெல்லி பயணத்தால் தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றியுள்ளது.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக மீண்டும் இடம் பெற இருக்கிறது. டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக குழு சந்தித்து பேசியதைத் தொடர்ந்து பா.ஜ.க. கூட்டணிக்கு அந்த கட்சி திரும்ப இருப்பது உறுதியாகி இருக்கிறது. 

இந்த நிலையில் அதிமுக கூட்டணிக்கு வந்தால் தமது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என முன்னர் அறிவித்திருந்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லி பயணம் மேற்கொள்வது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தற்போதைய நிலையில் திமுக தலைமையில் வலிமையான கூட்டணி நீடிக்கிறது. எதிர்க்கட்சிகள் தரப்பில் அனைத்தும் தனித்தனியாக சிதறி நிற்கின்றன. இது ஆளும் திமுக கூட்டணிக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் டெல்லி சென்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தலைவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பைத் தொடர்ந்து பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இடம் பெறுவது உறுதியாகி இருக்கிறது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் அமையக் கூடியது; எந்த ஒரு கூட்டணியும் நிரந்தரமாக இருப்பது இல்லை என்று மட்டும் தெரிவித்தார்;- 

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியை எடப்பாடி பழனிசாமி மறுக்கவில்லை. தமிழகத்தில் அதிமுக தலைவர்களும், பா.ஜ.க. உடனான கூட்டணியை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் அதிமுக மீண்டும் கூட்டணிக்கு வருவது பற்றி தமிழக பா.ஜ.க. தலைவர்கள் கனத்த மவுனம் காக்கின்றனர். தமிழக சட்டசபையில் நேற்றுமுன்தினம் திமுக- அதிமுக இடையே இது தொடர்பாக விவாதம் நடந்த போதும் கூட, பா.ஜ.க. மவுனமாக இருந்தது. 

தமிழக பா.ஜ.க. தலைவரான அண்ணாமலைதான், அ.தி.மு.க.வை மிக கடுமையாக விமர்சித்தவர்; பா.ஜ.க. கூட்டணிக்கு அதிமுக திரும்பினால், தமிழக மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் எனவும் ஏற்கனவே அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று அண்ணாமலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்களை சந்திக்கும் அண்ணாமலை, அதிமுகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிப்பாரா? அல்லது மேலிடக் கட்டளையை ஏற்று அதிமுகவை அரவணைப்பாரா? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 day ago
View all comments

வாசகர் கருத்து