முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து தொடரில் இருந்து ரோகித் விலகல் புதிய கேப்டன் யார்?

வியாழக்கிழமை, 27 மார்ச் 2025      விளையாட்டு
Rohit-Sharma 2023-05-17

Source: provided

மும்பை: இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விலகவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மோசமான தோல்வி...

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய அணி மோசமான தோல்வியைத் தழுவியது. மேலும், 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கோப்பையையும் பறிகொடுத்தது. இதனால், இந்திய வீரர்கள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டனர். அதுமட்டுமின்றி, இந்திய வீரர்கள் உள்ளூர்  போட்டிகளிலும் விளையாட அறிவுறுத்தப்பட்டனர்.  

விலகல் முடிவு...

முதல்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதிபெற தவறிய நிலையில், கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்படலாம் என்ற செய்திகள் உலா வந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ரோகித் சர்மா விலகுவதாக அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தாலும், விராட் கோலி தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டதாகவும் பி.சி.சி.ஐ.யின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஒருவேளை ரோகித் சர்மா விலகினால் புதிய கேப்டன் யார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. துணை கேப்டன் பும்ரா இன்னும் காயத்தில் இருந்து மீளாத நிலையில் புதிய கேப்டன் பதவி யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பயிற்சி ஆட்டம்...

இதற்கிடையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியாவின் ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் 4 நாள்கள் கொண்ட 2 போட்டிகளில் விளையாடவிருக்கிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர்கள் சிலரும் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளும் மோதும் முதல் போட்டி ஹெட்டிங்லேயில் வருகிற ஜூன் 20 ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக, மே 30 ஆம் தேதி காண்டர்பெர்ரியில் முதல் பயிற்சி ஆட்டமும், ஜூன் 6 ஆம் தேதி நார்த்தாம்டன்னில் இரண்டாவது பயிற்சி ஆட்டமும் நடைபெறவுள்ளதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

கருண் நாயருக்கு வாய்ப்பு?

உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடி வரும் கருண் நாயருக்கு இந்தியா ஏ அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024-2025 இடைப்பட்ட காலங்களில் கருண் நாயர் சையத் முஷ்டாக் அலி, ரஞ்சி தொடர்களில் முன்னணி ரன் குவிப்பாளராக இருந்தார். ரஞ்சி கோப்பையில் 4 சதங்கள் மற்றும் 2 அரைசதங்கள் உள்பட 863 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 day ago
View all comments

வாசகர் கருத்து