முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தியாவுக்கு வழங்கும் நிதியை குறைக்க கோரிக்கை

வியாழக்கிழமை, 27 மார்ச் 2025      விளையாட்டு
ICC 2023 08 04

Source: provided

மும்பை: பி.சி.சி.ஐ.-க்கு ஐ.சி.சி. வழங்கும் 38.5 சதவீத நிதியை 10 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

30 பக்க அறிக்கை...

சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் நவீன கிரிக்கெட் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகளை விளக்கியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு 30 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) வருவாய் பகிர்வு முறை எப்படி வளைந்துள்ளது என்பதையும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) 38.5 சதவீத வருவாயை எடுத்துக் கொள்வதாக எடுத்துரைத்துள்ளது. மேலும், சர்வதேச கிரிக்கெட் நிதி உகந்ததாக இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

பங்களிப்புகள் என்ன?

இந்த அறிக்கையில், பிசி.சி.ஐ. ஏன் ஐ.சி.சி.யின் வருவாய் பகிர்வில் அதிக பங்குகளை எடுத்துக் கொள்கிறது என்பது பற்றிய காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும், இந்த அறிக்கையில் ஐ.சி.சி. வருவாயில் பி.சி.சி.ஐ. பங்களிப்புகள் என்னென்ன என்பது பற்றியும் எந்த தகவலும் இடம்பெறவில்லை. இதுதவிர இந்திய சந்தைக்கான ஒளிபரப்பு உரிமம் எவ்வளவு தொகைக்கு விற்பனையாகிறது என்பது பற்றியும் எந்த தகவலும் இல்லை. மேலும், இந்த தொகை காரணமாக ஐ.சி.சி.க்கு கிடைக்கும் நிதி எவ்வளவு என்பது பற்றியும் குறிப்பிடப்படவில்லை. இந்திய அணி போட்டிக்காக விளம்பரதாரர்கள் எந்தளவுக்கு வரிசையில் நிற்கின்றனர் என்பது பற்றியும் இந்த அறிக்கையில் எந்த தகவலும் இடம்பெறவில்லை.

பெரும் பங்கு... 

இந்த அறிக்கையின் முக்கிய அம்சமாக ஐ.சி.சி. வருவாயில் பெரும் பங்கு பி.சி.சி.ஐ.க்கு செல்வதும் கிட்டத்தட்ட 50 சதவீத தொகை முதல் மூன்று பெரிய நாடுகளுக்கு மட்டுமே வழங்கப்படுவதும் எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. இது தவிர பி.சி.சி.ஐ.-க்கு வழங்கப்படும் 38.5 சதவீத நிதியை 10 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது. அறிக்கை குறித்து சந்தை வல்லுநர்கள் கூறும் போது, பால் மார்ச் தலைமையிலான ஆணையம் வழங்கியுள்ள பரிந்துரைகள் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருப்பதாகவும், ஒட்டுமொத்த விளையாட்டியின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு என்ன என்பதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 day ago
View all comments

வாசகர் கருத்து