முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி காக் அதிரடி ஆட்டம்: ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா

வியாழக்கிழமை, 27 மார்ச் 2025      விளையாட்டு
Rajasthan-team 2024-03-29

Source: provided

கொல்கத்தா: ராஜஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.

6ஆவது ஆட்டம்...

ஐ.பி.எல்.-இன் 6ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தானுடன் கொல்கத்தா அணி மோதியது. இதில் கே.கே.ஆர். அணியின் கேப்டன் ரஹானே டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 151/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக துருவ் ஜூரெல் 33 ரன்கள் எடுத்தார். ஜெய்ஸ்வால் 29, சஞ்சு சாம்சன் 25 ரன்கள் எடுத்தார்கள். 5 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்கள். 

152 ரன்கள் இலக்கு... 

கடைசியில் ஜோப்ரா ஆர்ச்சர் அதிரடியாக விளையாடி 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார். கே.கே.ஆர். அணியில் வருண் சக்கரவர்த்தி, மொயின் அலி, ஹர்சித் ராணா, வைபவ் அரோரா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். ஸ்பென்சார் ஜான்சன் 1 விக்கெட் எடுத்து 42 ரன்களை கொடுத்திருந்தார். 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

டி காக் அபாரம்...

2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த கொல்கத்தா அணி 17.3 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரரான குவின்டான் டி காக் 61 பந்துகளில் 8 பவுண்டரி 6 சிக்ஸருடன் 97 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரகுவன்ஷியும் 22 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 day ago
View all comments

வாசகர் கருத்து