முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு: மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி : ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிப்புக்கு எதிரான மனுவை ஏற்க சுப்ரீப் கோர்ட்டு மறுத்துவிட்டது.

ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை விடுமுறை நாட்களில் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதனால், மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை குறைவதால் தங்களின் ஓட்டல் தொழில் பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சூரியகாந்த் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஊட்டி, கொடைக்கானலில் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதித்த சென்னை ஐகோர்ட் உத்தரவில் தலையிட விரும்பவில்லை. அனைத்து சுற்றுச்சூழல் விவகாரங்களையும் கருத்தில் கொண்டே இந்த கட்டுப்பாட்டை ஐகோர்ட் விதித்திருக்கிறது என்று கூறி, மேல்முறையீட்டு மனுவை ஏற்க மறுத்துவிட்டது. மேலும், மீண்டும் சென்னை ஐகோர்ட்டை நாட அனுமதித்து மேல்முறையீட்டு மனுவை முடித்து வைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 day ago
View all comments

வாசகர் கருத்து