முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூட்கேசில் பெண்ணின் உடல் சடலமாக மீட்பு : கணவர் தற்கொலை முயற்சி

வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2025      இந்தியா
Suicide 2023 04 29

Source: provided

பெங்களூரு : கர்நாடகாவில் சூட்கேசில் பெண்ணின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. கணவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் ராகேஷ் ராஜேந்தரா கேடேகர். இவரும் இவரது மனைவி கவுரி கேடேகாவும் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தனர். இவர்கள் அருகிலுள்ள தொட்டகம்மனஹள்ளி கிராமத்தில் உள்ள ஒரு பிளாட்டில் வசித்து வந்தனர். 

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை 5.30 மணியளவில் பிளாட்டின் உரிமையாளர் இங்கு மர்மமான சூட்கேஸ் கிடப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்குள்ள வீட்டின் குளியலறையில் மர்மமான ஒரு சூட்கேஸ் இருப்பதை கண்டனர். அதனை திறந்து பார்த்த போலீசார் பெரும் அதிர்ச்சியைந்தனர். அந்த சூட்கேசில் ஒரு பெண்ணின் சடலம் கத்திக்குத்து காயங்களுடன் இருந்தது. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார். பெண்ணின் கணவரான ராகேஷ் இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகித்தனர். அதனால் ராகேஷை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் ராகேஷ் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்ததாகவும் புனேவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் ராஜேஷுக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் விசாரணைக்கு பின்னர் கொலைக்கான காரணம் தெரியவரும் எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago
View all comments

வாசகர் கருத்து