முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோடர் மக்களுடன் நடனமாடி மகிழ்ந்த டெல்லி கவர்னர்

சனிக்கிழமை, 29 மார்ச் 2025      தமிழகம்
Delhi-Governor-2025-03-29

ஊட்டி, கர்நாடகத்திற்குப் பயணம் மேற்கொண்ட டெல்லி துணைநிலை கவர்னர் வினைகுமார் சக்சேனா, உதகையில் பழங்குடி சமூகத்தினரான தோடர் மக்களுடன் நடனமாடி மகிழ்ந்தார்.

டெல்லி துணைநிலை கவர்னர் வினைகுமார் சக்சேனா உதகையில் உள்ள தோடர் பழங்குடி கிராமத்திற்கு நேற்று வருகை தந்திருந்தார். அங்கு அவர் மூங்கில் தோட்டத்தைத் திறந்துவைத்தார். பகல்கோடு மந்து பகுதிக்குச் சென்ற அவர் பழங்குடியினரின் உற்பத்தி பொருள்கள் வைக்கப்பட்ட அங்காடியைப் பார்வையிட்டார்.

அதன்பின்னர், துணைநிலை கவர்னர் தோடர் பழங்குடியின மக்களுடன் வட்டமாகச் சுற்றி வந்தும், கைத்தட்டிம் நடனமாடியும் மகிழ்ந்தார். இந்த விடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. பின்னர், பைக்காரா படகு இல்லத்துக்குச் சென்று படகு சவாரி செய்தார்.

அதற்கடுத்து, நேற்று முன்தினம் மாலை முதுமலை புலிகள் காப்பகம் வந்த சக்சேனாவை, துணை இயக்குநர் வித்யா வரவேற்றார். தொடர்ந்து வனத்துறை வாகனத்தில் முதுமலை வனப்பகுதியில் சவாரி செய்து, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமையும் அவர் சுற்றிப் பார்த்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago
View all comments

வாசகர் கருத்து