முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணியின் வேகப்பந்து, பேட்டிங் உலகத் தரமாக உள்ளது நியூசி. கேப்டன் வில்லியம்சன் பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 29 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

வெல்லிங்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் தோற்றாலும் இந்திய அணி பல போட்டிகளை வெல்லும் எனவும், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு, உலகத் தரமாக, சிறந்ததாக உள்ளது. மேலும், பேட்டிங் உலகத் தரமாக உள்ளது எனவும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நியூசி. வெற்றி...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் டெஸ்ட் உலக சாம்பியன் ஆனது நியூசிலாந்து அணி.

ஒரே ஒரு ஆட்டம்...

ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியதாவது., ஒரு போட்டியில் ஒரே ஒரு இறுதி ஆட்டத்தின் மூலம் வெற்றியாளரைத் தீர்மானிக்கிறார்கள். இதன்மூலம் ரசிகர்களுக்கு ஆர்வமும் பரபரப்பும் ஏற்படும். இது முழு கதையையும் சொல்லாது. 

எங்களுக்கு பெருமை...

இந்திய அணி மகத்தானதாக உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றதற்கு நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்திய அணியின் தரத்தை அந்தத் தோல்வியின் மூலம் குறை சொல்ல முடியாது. பல வருடங்களாக வலுவாக அணியாக உள்ளது. 

உலகத் தரம்...

இந்திய அணி பல கோப்பைகளை வெல்லும் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு, உலகத் தரமாக, சிறந்ததாக உள்ளது. சுழற்பந்துவீச்சும் அருமையாக உள்ளது. அவர்களுடைய பேட்டிங் உலகத் தரம். கிரிக்கெட் மீதான ஆர்வத்தை இந்திய அணி உண்டாக்குகிறது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து