முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசை: 4-வது இடத்தில் ஜெய்ஸ்வால்

வியாழக்கிழமை, 9 ஜனவரி 2025      விளையாட்டு
9-Ram-53

Source: provided

துபாய்: டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 4-வது இடத்தில் நீடிக்கிறார்.

புதிய பட்டியல்...

இந்தியா - ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 5 இடங்களில் முறையே ஜோ ரூட், ஹாரி புரூக், வில்லியம்சன், ஜெய்ஸ்வால் மற்றும் டிராவிஸ் ஹெட் மாற்றமின்றி தொடருகின்றனர்.

6-வது இடத்தை... 

இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்திய தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா 3 இடங்கள் முன்னேறி அவரது கெரியரின் சிறந்த தரநிலையாக 6-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் டாப் 10 இடத்திற்குள் இந்திய தரப்பில் ஜெய்ஸ்வால் (4-வது இடம்) மற்றும் ரிஷப் பண்ட் (9-வது இடம்) மட்டுமே உள்ளனர்.

ஸ்காட் போலன்ட்... 

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர் பும்ரா மாற்றமின்றி முதல் இடத்தில் தொடருகிறார். அவருக்கு அடுத்து கம்மின்ஸ் 2-வது இடத்தையும், ரபடா 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஜோஷ் ஹெசில்வுட் 2 இடங்கள் சரிந்து 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.  இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் அசத்திய ஸ்காட் போலன்ட் 29 இடங்கள் முன்னேற்றம் ஜடேஜாவுடன் 9-வது இடத்தை பகிர்ந்துள்ளார். டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் மார்கோ யான்சென் 2-வது இடத்திலும், வங்காளதேசத்தின் மெஹதி ஹசன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து