முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி சட்டசபை தேர்தல்: வரும் 13ம் தேதி பேரணியில் உரையாற்றும் ராகுல் காந்தி

வியாழக்கிழமை, 9 ஜனவரி 2025      இந்தியா
Rahul 2024-06-28

Source: provided

புதுடெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு வரும் 13ம் தேதி பேரணியில் உரையாற்றுகிறார் மக்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. 17-ந்தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். 18-ந்தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் 20-ந்தேதி ஆகும்.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8-ந்தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. டெல்லியில் ஆட்சியை பிடிக்க பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே ஆம் ஆத்மி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அதனை தொடர்ந்து காங்கிரஸுடன் கூட்டணி இல்லை, தனித்துப் போட்டி எனவும் தெரிவித்தது.

இதற்கிடையே டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ் வாதி கட்சிகள் தெரிவித்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வரும் 13ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஜீவன் ரக்ஷா யோஜனா என்ற பெயரில் ரூ.25 லட்சம் மருத்துவக்காப்பீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து