முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

வியாழக்கிழமை, 9 ஜனவரி 2025      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை, திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் உட்பட அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. இந்த எதிர்பாராத துயர சம்பவத்தில் தங்கள் உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக திருப்பதி திருமலையில் வைகுண்ட ஏகாதசியின்போது ஏழுமலையானை தரிசிக்க, வைகுண்ட வாயில் வழியாகச் செல்ல நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பக்தர்கள் முண்டியடித்துக்கொண்டு செல்ல முயன்றனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு மூச்சுத் திணறலால் பலர் மயக்கமடைந்தனர். சுமார் 35-க்கும் மேற்பட்டோர் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதி ருயா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு 6 பேர் உயிரிழந்தனர்.

இவர்களில் தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா உள்பட 5 பெண்கள் அடங்குவர். பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் கூறினார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.  தொடர்ந்து இன்று அவர் திருப்பதி திருமலை தேவஸ்தானுக்கு சென்று இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு நடத்தினார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரையும் சந்தித்தார். 

சொர்க்கவாசல் இலவச டோக்கன் பெற ஒரே நேரத்தில் அதிக அளவில் பொதுமக்கள் கூடியதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறியதாக தகவல் வெளியாகி உள்ளது. திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து