முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நம்பமுடியாத வேகத்தில் இந்தியாவின் வளர்ச்சி: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

வியாழக்கிழமை, 9 ஜனவரி 2025      இந்தியா
Modi-1-2025-01-09

புவனேஸ்வர், 21-ம் நூற்றாண்டில் இந்தியா நம்பமுடியாத வேகத்தில் முன்னேறி வருவதாகவும், உலகமே இன்று இந்தியா சொல்வதைக் கேட்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற ப்ரவாசி பாரதிய திவஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

உங்களைச் சந்திக்கும் போது நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். உங்கள் அனைவரிடமிருந்தும் நான் பெற்ற அன்பையும் ஆசீர்வாதங்களையும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். இன்று, உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்தியா ஜனநாயகத்தின் தாய் மட்டுமல்ல, ஜனநாயகம் மக்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். உலகமே இன்று இந்தியா சொல்வதைக் கேட்கிறது, அது தனது சொந்தக் கருத்துக்களை மட்டும் வலுவாக முன்வைக்கவில்லை, உலகளாவிய தெற்கின் கருத்தையும் முன்வைக்கிறது. அதன் பாரம்பரியத்தின் வலிமையின் காரணமாக, எதிர்காலம் போரில் இல்லை, புத்தரில் (அமைதியில்) உள்ளது என்பதை உலகிற்குச் சொல்ல இந்தியாவால் முடிகிறது. 21-ம் நூற்றாண்டு இந்தியா நம்பமுடியாத வேகத்திலும் அளவிலும் முன்னேறி வருகிறது. வரவிருக்கும் பல தசாப்தங்களுக்கு, இந்தியா உலகின் மிகவும் இளம் மற்றும் திறமையான மக்களைக் கொண்ட நாடாக இருக்கும்.

புலம்பெயர் மக்களை அவர்கள் வாழும் நாடுகளுக்கான இந்திய தூதராகத்தான் எப்போதும் கருதுகிறோம். புலம்பெயர்ந்தோர் எங்கிருந்தாலும் நெருக்கடியான சூழ்நிலைகளின்போது அவர்களுக்கு உதவுவது எங்கள் பொறுப்பாக நாங்கள் கருதுகிறோம். இது இன்றைய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் வழிகாட்டும் கொள்கைகளில் ஒன்றாகும்.  இன்னும் சில நாட்களில் பிரயாக்ராஜில் மகா கும்ப மேளா துவங்கும். எங்கும் மகிழ்ச்சியான சூழல் நிலவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து