முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் இருந்து இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சி

வியாழக்கிழமை, 9 ஜனவரி 2025      தமிழகம்
Omni-Bus

Source: provided

சென்னை: பொங்கல் பண்டிகை விடுமுறையொட்டி, சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை வருகிற 14-ம் தேதி முதல் கொண்டாடப் படவுள்ள நிலையில், வருகிற 19 வரை 6 நாள்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு 11-ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வோர் ஆயத்தமாகி வருகின்றனர்.

ரயில்கள், சிறப்பு ரயில்கள், அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு பயணச்சீட்டுகள் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டன. இந்த நிலையில், மக்கள் ஆம்னி பேருந்துகளை நாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் வழக்கமாக விற்பனை செய்யப்படும் தொகையைவிட பலமடக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். அதிக விலைக்கு பயணச்சீட்டு விற்பனை செய்யும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், எதையும் பொருட்படுத்தாமல் வெளிப்படையாக பேருந்து சேவை செயலிகளிலேயே அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு ரூ. 4 ஆயிரம் வரையிலும், மதுரைக்கு ரூ. 3,800 வரையிலும், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரூ. 3,500 வரையிலும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்வது குறித்த புகார்ளை 1800 425 6151 மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களிலும் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் என அரசு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து