முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தேரிக்காட்டு கருப்பட்டி ரயில் தெரியுமா?

Image Unavailable

சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு திசையன்விளையில் இருந்து திருச்செந்தூர் வரை ஓடியது அந்தத் தேரிக்காட்டுக் கருப்பட்டி ரயில்.1914 முதல் 1940 வரை அந்த ரயில் இயக்கப்பட்டதாக ரயில்வே வாரிய ஆவணங்கள் கூறுகின்றன. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ‘பாரி அண்ட் கோ’ நிறுவனம் குலசேகரன்பட்டினத்தில் ஒரு சர்க்கரை ஆலையைத் துவங்கியது. அந்த ஆலையின் சரக்குப் போக்குவரத்துக்காக ‘குலசேகரன்பட்டினம் லைட் ரயில்வே’ (கே.எல்.ஆர்) என்ற பெயரில் ரயில் பாதை அமைக்கப்பட்டது.

திருச்செந்தூரில் இருந்து திசையன் விளைக்கும், குலசேகரன் பட்டினத்திலிருந்து உடன்குடிக்கும் தனித்தனியாகச் சுமார் 46 கி.மீ தூரத்திற்கு ரயில் பாதை உருவாக்கப்பட்டது. சுதந்திரப் போர் மேகங்கள் இந்தியாவைச் சூழ்ந்திருக்க, இரண்டாம் உலகப் போர் உலகைச் சூழ்ந்திருக்க, தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக 1940ம் ஆண்டு இந்த ரயில் சேவையைப் பாரி நிறுவனத்தார் படிப்படியாக நிறுத்தி விட்டனர். திசையன்விளை – திருச்செந்தூர் இடையே மூன்று மணி நேரப் பயணத்துக்குக் கட்டணம், 13 அணாவாக (78 பைசா) இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago