முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டியர் டெத் விமர்சனம்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2023      சினிமா
Dear-Death-Review 20221 01

Source: provided

டியர் டெத் என்ற சொல் சிலரை பயமுறுத்தும். அந்த பயத்தை போக்குவது தான் இப்படத்தின் கரு. 4 தனித்தனி சிறு கதைகளின் தொகுப்பாக இப்படம் உருவாகி இருக்கிறது. ஒவ்வொரு கதையிலும் தலா ஒரு மரணம் என்று வகையில் நிகழ்கிறது. அது இயற்கை மரணமா அல்லது வேறு வகையிலா என்பதை புதியக் கோணத்தில் சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குனர் பிரேம்குமார், தொடக்க காட்சியில் வானத்தில் வட்டமடித்து வவ்வாலாக வந்திறங்கும் சந்தோஷ் பிரதாப் நான் தான் மரணம் என்று அறிமுகப்படுத்திக் கொள்வது திடுக் காட்சி. முதல் கதையில் கொரோனா வைரஸால் மனைவியை பறிகொடுக்கும் கணவன் கதறி அழும்போது கலங்க வைக்கிறார். படுக்கையில் கிடக்கும் தனது தாய்க்காண பணிவிடையில் பெரியவர் வெங்கடேசன் நடிப்பில் வின்னைத் தொடுகிறார். ஒன்றாக பள்ளி பருவத்தில் சுற்றும் நான்கு நண்பர்கள் பின்னர் வாழ்க்கைப் பாதையில் ஆளுக்கொரு திசையாக சென்றாலும் நட்பு மட்டும் மாறாமல் பயணிப்பது பசுமை நினைவுகள். நான்கு கதைகளும் மெல்ல நகர்ந்து  டாகுமென்டிரி படமாகவே பதிவாகிறது. இப்படத்தினை ஐஸ்வர்யா தியாகராஜன், சதீஷ் நாகராஜன் தயாரித்திருக்கின்றனர். இசை நவீன் அண்ணாமலை, கதை திரைக்கதையை ஸ்ரீதர் வெங்கடேசன் எழுத படத்தை இயக்கியுள்ளார் பிரேம்குமார். மொத்தத்தில் டியர் டெத் – விருதுக்கான ஒரு படைப்பு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 day ago
View all comments

வாசகர் கருத்து